Christian Songs Booth

Category: Tamil

Tamil Christian Song Lyrics

  • En Sirumaiyai Kannokki (என் சிறுமையை கண்ணோக்கி)

    என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
    என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் X 2
    துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
    ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

    பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
    பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் X 2

    1 வனாந்திரம் என் வாழ்வானதே
    பாதைகள் எங்கும் இருளானதே X 2
    எந்தன் அழுகுரல் கேட்டு
    நீரூற்றாய் வந்தவரே X 2

    பீர்லாகாய்ரோயீ… (Chorus)

    2 புறஜாதி என்னை தேடி வந்தீர்
    சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் X 2
    வாக்குதத்தம் செய்தீர்
    நீர் சொன்னதை நிறைவேற்றினீர் X 2

    பீர்லாகாய்ரோயீ… (Chorus)

    என் சிறுமையை… (Intro)

    பீர்லாகாய்ரோயீ… (Chorus)

    En Sirumaiyai Kannokki Paarthavar Neer
    En Ezhimaiyil Kaithookka Vandhavar Neer X 2
    Thuraththappatta Ennai, Meendum Serththukondeer
    Odhukkappatta Ennai, Periya Jaadhiyaai Maatrineer

    Beer Lahai Roi, Ennai Kaangindra Dhevan Neer
    Beer Lahai Roi, Engazh Jeeva Neerootru Neer X 2

    1 Vanaandhiram En Vaazhvaanadhe
    Paadhaigazh Engum Iruzhaanadhe X 2
    Endhan Azhukural Kaettu
    Neerootraai Vandhavare X 2

    Beer Lahai Roi… (Chorus) X 2

    2 Purajaadhi Ennai Thedi Vandheer
    Sudhandharavaazhiyaai Maatrivitteer X 2
    Vaakkudhaththam Seidheer
    Neer Sonnadhai Niraivetrineer X 2

    Beer Lahai Roi… (Chorus)

    En Sirumaiyai Kannokki…. (Intro)

    Beer Lahai Roi… (Chorus)

    (Written by Ps. Robert Roy, Album- Ummaal Koodum Vol.4)

    Back to index

    Click below to listen to the song↓

  • Magimayaale Kazhikoorungazh (மகிமையாலே களிகூருங்கள்)

    மகிமையாலே களிகூருங்கள்
    அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

    கிருபை என்றுமுள்ளது – 2
    என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் (அவர்- ) X 2

    மகிமையாலே… (Chorus)

    1 யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
    ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள்

    கிருபை என்றுமுள்ளது… (Chorus)

    2 தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
    கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள்

    கிருபை என்றுமுள்ளது… (Chorus)

    3 பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
    வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள்

    கிருபை என்றுமுள்ளது… (Chorus)

    மகிமையாலே… (Chorus)

    கிருபை என்றுமுள்ளது… (Chorus) X 2

    Magimayaale Kazhikoorungazh
    Avar Thudhigazhai Solli Paadungazh

    Kirubai Endrumuzhzhadhu – 2
    Endru Solli Aarpariyungazh (Avar-) X 2

    Magimayaale… (Chorus)

    1 Yakob’in Kudumbaththaare Thudhiyungazh
    Aaron’in Veettare Potrungazh

    Kirubai Endrumuzhzhadhu… (Chorus)

    2 Thaazhmaiyil Ninaiththavarai Thudhiyungazh
    Kannokki Paarthavarai Thudhiyungazh

    Kirubai Endrumuzhzhadhu … (Chorus)

    3 Paavamellaam Manniththaare Thudhiyungazh
    Viyaadhiyellaam Maatrinaare Thudhiyungazh

    Kirubai Endrumuzhzhadhu … (Chorus)

    Magimayaale … (Chorus)

    Kirubai Endrumuzhzhadhu … (Chorus) X 2

    Back to index

  • Thudhiyum Ganamum Ellaam (துதியும் கனமும் எல்லாம்)

    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே – 2

    1 கிருபைகள் என்னில்
    பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் – 2
    உம் கரங்களால் என்னை அணைத்துக்
    கொண்டீரே ஸ்தோத்திரம் – 2

    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே – 2

    2 சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
    வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் X 2
    மகிமை கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே X 2

    துதியும் கனமும்… (Chorus)

    3 கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
    உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் X 2
    மகிமை கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே X 2

    துதியும் கனமும்… (Chorus)

    Thudhiyum Ganamum Ellaam
    Umakke Dheva Umakke – 2

    1 Kirubaigal Ennil
    Peruga Cheydheere Sthothiram X 2
    Um Karangazhaal Ennai Annaiththu
    Kondeere Sthothiram X 2

    Thudhiyum Ganamum Ellaam
    Umakke Dheva Umakke – 2

    2 Sodhanai Ennil Vandha Podhum Neer Kaaththeer
    Vedhanai Ennil Vandha Podhum Kirubai Thandheer X 2
    Magimai Ganamum Ellaam
    Umakke Dheva Umakkae X 2

    Thudhiyum Ganamum… (Chorus)

    3 Kanneer Ennil Vandha Podhum Neer Thudaiththeer
    Um Karangazhaal Ennai Annaiththu Kaaththu Kondeer X 2
    Magimai Ganamum Ellaam
    Umakke Dheva Umakke X 2

    Thudhiyum Ganamum… (Chorus)

    (Written by Eva. Selvakumar, Album- Neere En Jeevan Vol.1)

    Back to index

    Click below to listen to the song↓

    https://www.youtube.com/watch?v=difjg2DyJC8
  • Dhevakumaara Dhevakumaara (தேவகுமாரா தேவகுமாரா)

    தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
    தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க

    நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2

    தேவகுமாரா தேவகுமாரா… (Chorus)

    1 உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
    தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் X 2

    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே X 2
    நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே

    தேவகுமாரா தேவகுமாரா… (Chorus)

    2 உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
    உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும் X 2

    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாம என் பொழுது விடியாதே X 2
    நீங்க இல்லாம என் பொழுது விடியாதே…

    தேவகுமாரா தேவகுமாரா… (Chorus)

    Dhevakumaara, Dhevakumaara, Enna Ninaichidunga
    Dhevakumaara, Dhevakumaara, Konjam Ninaichidunga

    Neenga Ninaicha, Aaseervaadham-dhaan
    Ennai Marandha, Yenge Poven Naan X 2

    Dhevakumaara, Dhevakumaara… (Chorus)

    1 Udaindha Paaththiram Naan, Adhu Umakke Theriyum
    Dhevan Payanpaduththugireer Idhu Yaarukku Puriyum X 2

    Udhavaadha Ennil Neer Uravaaneer
    Neenga Illamal En Ulagam Vizhikkaadhe X 2
    Neenga Illamal En Ulagam Vizhikkaadhe…

    Dhevakumaara, Dhevakumaara… (Chorus)

    2 Ummai Marandhu Vaazhndhavan Naan, Adhu Umakke Theriyum
    Ummai Marudhazhiththavan Naan, Idhai Ulagey Ariyum X 2

    Udhavaadha Ennil Neer Uravaaneer
    Neenga Illamal En Pozhudhum Vidiyaadhe X 2
    Neenga Illamal En Pozhudhum Vidiyaadhe…

    Dhevakumaara, Dhevakumaara… (Chorus)

    (Written by Pr. Y. Wesley)

    Back to index

    Click below to listen to the song↓

    Original song
    Cover version
  • Ennai Um Kaiyil (என்னை உம் கையில்)

    என்னை உம் கையில்
    படைத்தேன் முழுவதுமாய்
    என்னையும் பயன்படுத்தும் X 2

    குயவன் நீர் களிமண் நான்
    உம் சித்தம் நிறைவேற்றுமே X 2

    என்னை உம் கையில்… (Chorus)

    1 தவறிய பாத்திரம் நான்
    தவறுகள் நீக்கி என்னை
    தகுதியாய் நிறுத்திடுமே

    குயவன் நீர்… (Chorus) X 2

    என்னை உம் கையில்… (Chorus) X 2

    2 குறைவுள்ள பாத்திரம் நான்
    குறைவுகள் நீக்கி உந்தன்
    கருவியாய் பயன்படுத்தும்

    குயவன் நீர்… (Chorus) X 2

    என்னை உம் கையில்… (Chorus) X 2

    Ennai Um Kaiyil
    Padaiththen Muzhuvadhumaai,
    Ennaiyum Payanpaduththum X 2

    Kuyavan Neer Kazhiman Naan,
    Um Siththam Nirai Vetrume… X 2

    Ennai Um Kaiyil… (Chorus)

    1 Thavariya Paaththiram Naan,
    Thavarugazh Neekki Ennai
    Thagudhiyaai Niruththidume… X 2

    Kuyavan Neer… (Chorus) X 2

    Ennai Um Kaiyil… (Chorus) X 2

    2 Kuraivuzhzha Paaththiram Naan
    Kuraivugazh Neekki Umdhan
    Karuviyaai Payan Paduththum… X 2

    Kuyavan Neer… (Chorus) X 2

    Ennai Um Kaiyil… (Chorus) X 2

    (Written by Joel Thomasraj, Album- Ellamae 2)

    Back to index

    Click below to listen to the song↓

  • Yakobin Dhevan Thunaiyaanaar (யாக்கோபின் தேவன் துணையானார்)

    யாக்கோபின் தேவன் துணையானார்
    பாக்கியவான் நான் பாக்கியவான் – 2

    (Chorus)
    தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
    நம்பிக்கை வைத்துள்ளேன்
    பாக்கியவான், நான் பாக்கியவான்!
    யாக்கோபின் தேவன் துணையானார்
    பாக்கியவான் நான் பாக்கியவான் – 2

    1 ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
    அல்லேலுயா நீ தினம் பாடு
    நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார் X 2

    தேவனாம் கர்த்தர் இவர் மேலே… (Chorus)

    2வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார்
    அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
    ராஜாரீகம் செய்கின்றார் X 2

    3 தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
    சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார்
    திக்கற்ற பிள்ளைகளை X 2

    தேவனாம் கர்த்தர் உம் மேலே… (Chorus)

    4 பார்வையற்றோரின் கண் திறக்கின்றர்
    பசியுற்றோரை போக்குகின்றார்
    ஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்
    நியாயம் செய்கின்றார் (நீதி)

    Yakobin Devan Thunaiyaanar
    Bakkiyavan Naan Bakkiyavan X 2

    (Chorus)
    Devanam Karthar Ivar Mele
    Nambikai Vaithuzhzhen X 2
    Bakkiyavan Naan Bakkiyavan – 2
    Yakobin Devan Thunai Aanar
    Bakkiyavan Naan Bakkiyavan

    1 Athumave Nee Kartharai Thuthi
    Alleluya Nee Dhinam Padu X 2
    Nambathakkavar, Nanmai Seibavar
    Namakkul Vaazhkirar

    Devanam Karthar Ivar Mele… (Chorus)

    2 Vaanam Boomi Ivar Undaakkinaar
    Maaberum Kadalai Uruvaakkinaar X 2
    Arasaazhkindar Endrendraikkum
    Rajareegam Seikirar X 2

    Devanam Karthar Ivar Mele… (Chorus)

    3 Thaazhthapattorai Uyarthugindrar
    Kattappattorai Kattavizhkkindrar X 2
    Snegikkindrar Aadharikkindrar
    Dhikkatra Pizhzhaigazhai X 2

    Devanam Karthar Um Mele… (Chorus)

    4 Paarvaiyuttrorin Kan Thirakkindraar
    Pasiyuttrorai Pokkugindrar
    Ozhikkapattor Thazhzhapattor
    Nyaayam Seigindraar

    Devanam Karthar Um Mele… (Chorus)

    (Written by: Fr S.J. Berchmans, Album: Jebathotta Jeyageethangal, Vol. 38)

    Back to index

    Click below to listen to the song

  • Yerusalem Yerusalem Unnai (எருசலேம் எருசலேம் உன்னை)

    எருசலேம் எருசலேம்
    உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
    உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
    அரண்மனைக்குள்ளே பூரண சுகம்

    1 கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
    ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் X 2
    தயை செய்யும் காலம் வந்தது – 2
    குறித்த நேரமும் வந்துவிட்டது – 2

    விழித்தெழு சீயோனே
    வல்லமையை தரித்துக்கொள் X 2
    எருசலேம் எருசலேம் உன்னை
    சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்

    2 துரத்துண்ட இஸ்ரவேலரை
    துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் X 2
    சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2
    மகிமையிலே காட்சியளிப்பார் – 2

    விழித்தெழு சீயோனே… (Chorus)

    3 பூமியின் ஜனங்களுக்குள்ளே
    புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் X 2
    உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் – 2
    கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – 2

    விழித்தெழு சீயோனே… (Chorus)

    4 இரவும் பகலும் மௌனமாயிராத
    ஜாமக்காரர் உன் மதில்மேல் X 2
    அமரிந்திருக்க இருப்பதில்லை – 2
    அமர்ந்திருக்க விடுவதில்லை – 2

    விழித்தெழு சீயோனே… (Chorus)

    5 மலைகள் குன்றுகள் நடுவே
    மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் X 2
    மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
    ஓடி வந்து மீட்படைவார்கள் – 2

    6 கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
    தெரிந்துகொண்டார் உறைவிடமாய் (அவர்-) X 2
    அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
    அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2

    Yerusalem Yerusalem
    Unnai Snehippor Sugiththiruppaargazh
    Un Alangaththirkuzhzhe Samaadhaanam
    Aranmanaikkuzhzhe Poorana Sugam

    1 Karthar Unmel Manam Irangugiraar
    Aadharavaai Ezhundhu Nirkindrar X 2
    Dhayai Seyyum Kaalam Vandhadhu – 2
    Kuriththa Neramum Vandhuvittadhu – 2

    Vizhiththezhu Seeyoney
    Vallamaiyai Dhariththukkozh x 2
    Yerusalem Yerusalem
    Unnai Snehippor Sugiththiruppaargazh

    2 Thuraththunda Isravelarai
    Thuridhamaay Kootticherkkindrar X 2
    Seeyonai Thirumba Kattugiraar – 2
    Magimaiyile Kaatchiyazhippaar – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    3 Boomiyin Janangazhukkuzhzhe
    Pugalchiyum Keerthiyumaavaazh X 2
    Unnilirundhu Vedham Vezhippadum – 2
    Karthar Vasanam Prasiththamaagum – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    4 Iravum Pagalum Maunamaayiraadha
    Jaamakkaarar Un Madhilmel X 2
    Amarindhirukka Iruppadhillai – 2
    Amarnthirukka Viduvadhillai – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    5 Malaigazh Kundrugazh Naduve
    Miga Melaai Nilainiruththugiraar X 2
    Makkazh Inam Thedi Varuvaargazh – 2
    Odi Vandhu Meetpadaivaargazh – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    6 Karthar Unnai Virumbinapadiyaal
    Therindhukondaar Uraividamaai (Avar-) X 2
    Amarnthirukkum Ariyanai Nee Dhaan – 2
    Agilaththirkkum Vezhichcham Nee Dhaan – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    (Written by: Fr S.J. Berchmans, Album: Jebathotta Jeyageethangal, Vol. 38)

    Back to index

    Click below to listen to the song

  • Munnorgazh Um Meedhu (முன்னோர்கள் உம் மீது)

    முன்னோர்கள் உம் மீது
    நம்பிக்கை வைத்தார்கள்
    நம்பியதால் விடுவித்தீர் X 2

    1 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
    விடுவிக்கப் பட்டார்கள்
    (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
    ஏமாற்றம் அடையவில்லை X 2

    முன்னோர்கள் உம்… (Chorus)

    2 கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
    நிறைவேற்ற வல்லவர் என்று X 2
    தயங்காமல் நம்பினதால்
    ஆபிரகாம் தகப்பனானான் X 2

    அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்
    வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2
    முன்னோர்கள் உம்… (Chorus)

    3 சிறையிருப்பை திருப்புவேன் என்று
    கர்த்தர் சொன்ன வாக்குறுதியை X 2
    பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
    ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2

    அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்
    வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2
    முன்னோர்கள் உம்… (Chorus)

    4 தேசத்திற்கு திரும்பி போ நீ
    நன்மை செய்வேன் என்று சொன்னாரே X 2
    அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
    ஜேக்கப் ஜெயம் எடுத்தான் X 2

    அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்
    வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2
    முன்னோர்கள் உம்… (Chorus)

    Munnorgazh Um Meedhu
    Nambikkai Vaiththargal
    Nambiyadhaal Viduviththeer X 2

    1 Vendinaargazh Kooppittaargazh
    Viduvikkappattaargazh
    Vetkappattu Pogavillai
    Yematram Adayavillai (Mugam-) X 2

    Munnorgazh Um Meedhu… (Chorus)

    2 Karththar Koduththa Vaakkuruthiyai
    Niraivetra Vallavar Endru X 2
    Thayangaamal Nambinathaal
    Abraham Thagappan Aanaan X 2

    Arikkai Seivom Jeyam Eduppom
    Vakkurudhiyai Pidiththukondu X 2
    Munnorgazh Um Meedhu… (Chorus)

    3 Sirayiruppai Thiruppuven Endru
    Karuththai Sonna Vaakkuruthiyai X 2
    Piditthukkondu Daniel Andru
    Jebiththu Jeyam Eduththaan X 2

    Arikkai Seivom Jeyam Eduppom
    Vakkurudhiyai Pidiththukondu X 2
    Munnorgazh Um Meedhu… (Chorus)

    4 Desaththirku Thirumbi Po Nee
    Nanmai Seiven Endru Sonnare X 2
    Antha Thiru Vaarthayai Pidiththukondu
    Yacob Jeyam Eduththaan – 2

    Arikkai Seivom Jeyam Eduppom
    Vakkurudhiyai Pidiththukondu – 2
    Munnorgazh Um Meedhu… (Chorus)

    (Written by: Fr S J Berchmans, Album: Jebathotta Jeyageethangal Vol. 39)

    Back to index

    Click below to listen to the song

  • Pagal Nera Paadal Neere (பகல் நேரப் பாடல் நீரே)

    பகல் நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்

    1 எருசலேமே உனை மறந்தால்
    வலக்கரம் செயல் இழக்கும்
    மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
    நாவு ஒட்டிக் கொள்ளும் என்

    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்

    2 கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும் போது
    தாங்கினீர் கிருபையினால், என்
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்

    3 தாய்மடி தவழும் குழந்தைபோல
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்

    4 பார்வையில் செருக்கு எனக்கில்லை
    இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
    பயனற்ற உலகத்தின் செயல்களிலே
    பங்கு பெறுவதில்லை
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்

    Pagal Nera Paadal Neere
    Iravellaam Kanavu Neere
    Melaana Sandhosham Neere
    Naazhellaam Umai Paaduven, En

    1 Erusaleme Unai Marandhaal
    Valakkaram Seyal Izhakkum
    Magizhchiyin Magudamaai Karuthaavidil
    Naavu Otti Kozhzhum, En
    Magizhchiyin Magudam Neerthaanayya
    En Manavaazhare Umai Maraven

    2 Kavalaigal Perugi Kalangumbodhu
    Magizhviththeer Um Anbinaal
    Kaalgazh Sarukki Thadumaarum Pothu
    Thaangineer Kirubaiyinaal, En
    Magizhchiyin Magudam Neerthaanayya
    En Manavaazhare Umai Maraven

    3 Thaaimadi Thavazhum Kuzhandhaipola
    Magizhchiyaay Irukkindren
    Ippodhum Eppodhum Nambiyuzhzhen
    Ummaiye Nambiyuzhzhen Magizhchi
    Magizhchiyin Magudam Neerthaanayya
    En Manavaazhare Umai Maraven

    4 Paarvaiyil Serukku Enakkillai
    Irumaappu Uzhzhaththil Endrumillai
    Payanatra Ulagaththin Seyalgazhile
    Pangu Peruvadhillai
    Magizhchiyin Magudam Neerthaanayya
    En Manavaazhare Umai Maraven

    Written by: Fr S J Berchmans, Album: Jebathotta Jeyageethangal Vol. 29

    Back to index

    Click below to listen to the song

  • Neer Ennai Thaanguvadhaal (நீர் என்னை தாங்குவதால்)

    நீர் என்னை தாங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய் X 2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2

    1 எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
    கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
    கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
    தலை நிமிர செய்பவர் நீர் தான் (-என்) X 2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2
    நீர் என்னை தாங்குவதால்… (Chorus)

    2 கடந்த நாட்களில் நடந்த காரியம்
    நினைத்து தினம் கலங்கினாலும் X 2
    நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
    என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் X 2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2
    நீர் என்னை தாங்குவதால்… (Chorus)

    3 இன்று காண்கின்ற எகிப்தியரை
    இனி ஒருபோதும் காண்பதில்லை X 2
    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
    காத்திருப்பேன் நான் பொறுமையுடன் X 2

    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2
    நீர் என்னை தாங்குவதால்… (Chorus)

    Neer Ennai Thaanguvadhaal
    Thoonguven Nimmathiyaay X 2
    Paduththurangi Vizhiththezhuven
    Karththar Ennai Aatharikkindreer X 2

    1 Edhirthezhuvor Peruginaalum
    Karthar Kai Vittaar Endru Sonnaalum X 2
    Kedagam Neer Dhaan Magimaiyum Neer Dhaan
    Thalai Nimira Seibavar Neer Thaan (En-) X 2

    Paduththurangi Vizhiththezhuven
    Karthar Ennai Aadharikkindreer X 2
    Neer Ennai Thaanguvadhaal… (Chorus)

    2 Kadandha Naatkazhil Nadandha Kaariyam
    Ninaiththu Dhinam Kalanginaalum X 2
    Nadandhadhellam Nanmaikkedhuvai
    En Thagappan Neer Maatrugireer X 2

    Paduththurangi Vizhiththezhuven
    Karthar Ennai Aadharikkindreer X 2
    Neer Ennai Thaanguvadhaal… (Chorus)

    3 Indru Kaangindra Egypthiyarai
    Ini Oru Podhum Kaanbadhillai X 2
    Karthar Enakkaai Yuththam Seigindraar
    Kaaththiruppen Naan Porumayudan X 2

    Paduththurangi Vizhiththezhuven
    Karthar Ennai Aadharikkindreer X 2
    Neer Ennai Thaanguvadhaal… (Chorus)

    (Written by: Fr S J Berchmans, Album: Jebathotta Jeyageethangal Vol. 39)

    Back to index

    Click below to listen to the song