Christian Songs Booth

Tag: gospel songs

  • Aayiramaayiram Nanmaigal (ஆயிரமாயிரம் நன்மைகள்)

    ஆயிரமாயிரம் நன்மைகள்
    அனுதினம் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2
    நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லையே – 2

    1 காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
    நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
    உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்

    எல்லா நெருக்கத்திலும், என்னை
    விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே X 2

    ஆயிரமாயிரம் நன்மைகள்… (Chorus) X 2

    2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
    மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
    தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்

    எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
    அன்பின் நல்ல கர்த்தரே X 2

    ஆயிரமாயிரம் நன்மைகள்… (Chorus) X 2

    Aayiram Aayiram Nanmaigazh,
    Anudhinam Ennai Soozhndhida
    Kirubaiyum, Irakkamum, Anbum Kondeere-2
    Nalla Ebinesarai, Ennai Nadathi Vandheere
    Nandri Solla Vaarthai Illaiyae-2

    1 Kaalai Maalai Ella, Velaiyilum Ennai,
    Nadathum Um Karangal Naan Kanden
    Thevai Perugum Podhu, Sikkithavithidaadhu
    Udhavum Um Karangal Naan Kandaen

    Ella Nerukkathilum, Ennai Vizhaamal Kaakkum
    Anbin Nalla Karthare X 2

    Aayiram Aayiram Nanmaigazh… (Chorus) X 2

    2 Marana Pazhzhathaakkil, Naan Nadandha Velai
    Meetkum Um Karangal Naan Kanden
    Vaadi Nindra Velai, Madindhidadhu Ennai
    Thaangum Um Karangal Naan Kanden

    Endhan Maaraavin Vazhvai, Madhuramai Matrum
    Anbin Nalla Karthare X 2

    Aayiram Aayiram Nanmaigazh… (Chorus) X 2

    (Written by Johnsam Joyson, Album: Karunaiyin Pravaagam 5)

    Back to index

    Click below to listen to the song

  • Malaigal Vilaginaalum (மலைகள் விலகினாலும்)

    மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
    கிருபை விலகாது
    சமாதானம் நிலை பெயராது

    கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4
    மலைகள் விலகினாலும்…

    1 கோபம் கொள்வதில்லை என்று, வாக்குரைத்தீர்
    கடிந்து கொள்வதில்லை என்று, ஆணையிட்டீர் (என்மேல்) X 2
    பாவங்களை மன்னீத்தீர்,
    அக்கிரமங்கள் எண்ணுவதில்லை X 2
    இயேசு எனக்காய் பலியானதனால் X 2

    கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4

    2 நீதியினால் நான், ஸ்திரப்படுவேன்
    கொடுமைக்கு நான், தூரமாவேன் X 2
    பயமில்லாதிருப்பேன், திகிலுக்கு தூரமாவேன்
    எதுவும் என்னை அணுகுவதில்லை X 2

    கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4

    3 எனக்கு விரோதமாய், எழும்பும் ஆயுதம்
    வாய்க்காதே போகும் என்று, வாக்களித்தீர் X 2
    எனக்கு விரோதமாய், நியாயத்தில் எழும்பும் நாவை
    குற்றப்படும்படி செய்திடுவீர் X 2

    கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4

    மனிதர்கள் விலகினாலும்
    நம்பினோர் கைவிரித்தாலும்
    கிருபை விலகாது
    சமாதானம் நிலைபெயராது X 2
    மலைகள் விலகினாலும்…

    Malaigal Vilaginaalum
    Parvadhangazh Nilai Peyarndhaalum
    Kirubai Vilagaadhu
    Samaadhanam Nilai Peyaraadhu X 2

    Kirubai Vilagaadhaiyya (-Yesaiyya Um) x 4 Malaigal Vilaginalum…

    1 Kobam Kozhvadhillai Endru, Vaakkuraiththeer
    Kadindhu Kozhvadhillai Endru, Aanayitteer (-Enmel) X 2
    Paavangal Manniththeer,
    Akramangal Ennuvadhillai,
    Yesu Enakaaga Baliyaanadhaal x 2

    Kirubai Vilagaadhaiyya x 4 (-Yesaiyya Um)

    2 Needhiyinaal Naan, Sthirapaduven
    Kodumaikku Naan, Dhooramaaven x 2
    Bayamillaathiruppen, Dhigilukku Dhooramaven
    Edhuvum Ennai Anuguvadhillai x 2

    Kirubai Vilagaadhaiyya (-Yesaiyya Um) x 4

    3 Enakku Virodhamai, Ezhumbum Ayudham
    Vaaikkaadhey Pogum Endru, Vakkazhitheer x 2
    Enakku Virodhamai, Nyayaththil Ezhumbum Naavai
    Kutrampatumbadi Seidhiduveer x 2

    Kirubai Vilagaadhaiyya x 4 (-Yesaiyya Um)

    Manidhargal Vilaginaalum
    Nambinor Kaivirithaalum
    Kirubai Vilagaadhu
    Samaadhaanam Nilaipeyaraadhu X 2
    Malaigazh Vilaginaalum…

    (Written by Joseph Aldrin, Album: Pradhana Aasariyarae, Vol. 1)

    Back to index

    Click below to listen to the song

  • Oru magimayin megam (ஒரு மகிமையின் மேகம்)

    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடுதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடுதே X 2

    விலகாத மேகம் நீர்
    முன் செல்லும் மேகம் நீர் X 2

    ஆவியானவரே,
    அன்பின் ஆவியானவரே
    வல்ல ஆவியானவரே,
    தெளிவின் ஆவியானவரே
    மகிமையின் ஆவியானவரே,
    அன்பின் ஆவியானவரே
    வல்ல ஆவியானவரே,
    தெளிவின் ஆவியானவரே…

    என் பேச்சில, என் மூச்சில
    என் சொல்லுல, என் செயலுல கலந்திருக்கீங்க…
    என் நினைவுல, என் நடத்தையில
    என் உணர்வுல, என் உயிரில கலந்திருக்கீங்க…

    அன்பின் ஆவியானவரே
    விலையேறப் பெற்றவரே
    எனை ஆளும் பரிசுத்தரே
    நன்றி ஐயா… X 2

    ஒரு மகிமையின் மேகம்… X 2

    ஆவியானவரே… X 2

    Oru magimayin megam,
    Indha idaththai mooduthey
    Oru magimayin megam,
    Yen janaththai mooduthey X 2

    Vilagaadha megam Neer
    Munsellum megam Neer X 2

    Aaviyaanavare,
    Anbin Aaviyaanavare…
    Valla Aaviyaanavare,
    Thelivin Aaviyaanavarae.
    Magimaiyin Aaviyaanavare,
    Anbin Aaviyaanavarae.
    Valla Aaviyaanavarae,
    Thelivin Aaviyaanavarae…

    En pechchula, en moochchula
    En sollula, en seyalula kalandhirukkeenga…
    En ninaivula, en nadaththayila
    En unarvula, en uyirila kalandhirukkeenga…

    Anbin aaviyaanavare
    Vilaiyera pettravare
    Enai aazhum parisuththarae
    Nandri aiyaa… X 2

    Oru magimayin megam… X 2

    Aaviyaanavare… X 2

    (Written by: Dr. Joseph Aldrin, Album: Pradhana Aasiriyare Vol. 1)

    Back to index

    Click below to listen to the song

  • Adaikkalame Umadhadimai Naane (அடைக்கலமே உமதடிமை நானே)

    அடைக்கலமே, உமதடிமை நானே
    ஆர்ப்பரிப்பேனே, அகமகிழ்வேன்
    கர்த்தர், நீர் செய்த நன்மைகளையே
    நித்தம் நித்தம் நான் நினைப்பேனே X 2

    1 அளவற்ற அன்பினால் அணைப்பவரே
    எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே X 2
    மாசில்லாத நேசரே, மகிமைப்பிரதாபா
    பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே X 2

    ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus)

    2 கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
    சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே X 2
    நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
    பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே X 2

    ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus)

    3 என்னை என்றும் போதித்து நடத்துபவரே
    கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே X 2
    நடக்கும் வழிதனை காட்டுபவரே
    நம்பி வந்தோரை கிருபை சூழ்ந்துகொள்ளுதே X 2

    ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus)

    4 கரம்பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
    கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
    குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
    அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே X 2

    ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus)

    5 பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
    சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே X 2
    இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
    உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே X 2

    ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus)

    Adaikkalame, Umadhadimai Naane
    Aarparippene Agamagizhndhe
    Karthar Neer Seytha Nanmaikalaiye
    Niththam Niththam Naan Ninaippaen

    1 Azhavatra Anbinaal Aravanaippavare
    Ennatra Nanmaiyaal Niraippavare
    Maasillaadha Nesare, Makimai Prathaapaa
    Maasatta Um Paatham Patriduvene

    Aa Adaikkalame, Umadhadimai Naane… (Chorus)

    2 Karthare Um Kriyaikal Periyavaikale
    Suththare Um Seyalgal Magaththuvamaanadhe
    Niththiyare Um Niyaayangal Endrum Nirkume
    Baktharin Perinba Paakkiyam Neere

    Aa Adaikkalame, Umadhadimai Naane… (Chorus)

    3 Ennai Endrum Podhiththu Nadaththubavare
    Kannai Vaiththu Aalosanai Sollubavare X 2
    Nadakkum Vazhithanai Kaattupavare
    Nambi Vanthorai Kirubai Soozhndhu-kozhzhudhe X 2

    Aa Adaikkalame, Umadhadimai Naane… (Chorus)

    4 Karam Patri Nadaththum Karthar Neerallo
    Kooppitta Ennai Gunamaakkineerallo
    Kuzhiyil Vizhaadhapadi Kaaththukondeere
    Azhugaiyai Kazhippaaga Maatrivittirae

    Aa Adaikkalame, Umadhadimai Naane… (Chorus)

    5 Paavangazhai Paaraadhennai Patrikkonndeere
    Saabangazhai Neekki Suththa Uzhzham Thandheere X 2
    Ratchannyaththin Sandhoshaththai Thirumba Thandheere
    Urchaaga Aavi Ennai Thaanga Cheidheere X 2

    Aa Adaikkalame, Umadhadimai Naane… (Chorus)

    (Book: Geethangalum keerthanaigalum No. 173)

    Back to index

    Click below to listen to the song

  • Ummel Vaanjaiyaai Iruppadhanaal (உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்)

    உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
    என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
    உந்தன் நாமத்தை அறிந்ததனால்
    வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் X 2

    இயேஷுவா இயேஷுவா
    உந்தன் நாமம் பலத்த துருகம் X 2
    நீதிமான் நான் ஓடுவேன்
    ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் X 2

    உம்மேல் வாஞ்சையாய்…

    1 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
    பதில் அளிப்பீர் வெகு விரைவில் X 2
    என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
    தலை நிமிர செய்திடுவீர் X 2

    இயேஷுவா… (Chorus)

    உம்மேல் வாஞ்சையாய்…

    2 வேடனின் கண்ணி பாழாக்கும்
    கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் X 2
    உமது சிறகுகளாலே என்னை மூடி
    மறைத்துக் கொள்வீர் X 2

    இயேஷுவா… (Chorus)

    உம்மேல் வாஞ்சையாய்…

    Ummel Vaanjaiyaai Iruppadhanaal
    Ennai Viduvippeer Nichchayamaai
    Umdhan Naamathai Arindhadhanaal
    Vaipeer Uyarndha Adaikkalathil X 2

    Yeshuvaa Yeshuvaa
    Uthan Naamam Balatha Thurukam X 2
    Needhimaan Naan Oduven,
    Odi Adharkkul Sugam Kaanuven X 2

    1 Aabaththu Naazhil, Kooppidum Enakku
    Badhilazhippeer Vegu Viraivil X 2
    Ennudan Iruppeer, Thappuvippeer
    Thalai Nimira, Cheidhiduveer X 2

    Yeshuvaa Yeshuvaa… (Chorus)

    Ummel Vaanjaiyaai Iruppadhanaal…

    2 Vedanin Kanni, Paazhaakum Kozhzhai Noi
    Anugaamale, Thappuvippeer X 2
    Umadhu Siragugazhaale,
    Ennai Moodi, Maraiththu Kozhveer X 2

    Yeshuvaa Yeshuvaa… (Chorus)

    Ummel Vaanjaiyaai Iruppadhanaal…

    (Written by Dr.Joseph Aldrin, Album: Pradhana Aasariyarae Vol.2)

    Back to index

    Click below to listen to the song

  • Aaradhanai Umakku Thaane (ஆராதனை உமக்குத்தானே)

    ஆராதனை – 3
    உமக்குத்தானே X 2

    (Chorus)
    உள்ளமும் ஏங்கிடுதே
    உணர்வுகளும் துடிக்குதே
    உம் முகத்தை பார்க்கணும்
    உம்மோடு இணையணும்
    ஆராதனை – 3
    உமக்குத்தானே X 2

    1 நீர் செய்த நன்மைகளை,
    நினைத்து பார்க்கிறேன்
    ஒவ்வொன்றும் ஒரு விதம்,
    ருசித்து மகிழ்கின்றேன் X 2

    எல்லாம் மறக்கணும்
    உம்மையே நினைக்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    இன்னும் உம்மை நெருங்கணும் X 2

    உள்ளமும் ஏங்கிடுதே… (Chorus)

    2 என் ஆசை நீர்தானே
    நீரின்றி நானில்லை
    உம் அன்பை விட்டு என்னால்
    எங்கு செல்ல கூடுமோ X 2

    நீரே என் நம்பிக்கை
    நீரே என் ஆதரவு
    உம் சமுகமே போதும்
    அதுவே என் ஆனந்தம் – 2

    உள்ளமும் ஏங்கிடுதே… (Chorus)

    Aarathanai – 3
    Umakke Thaaney X 2

    (Chorus)
    Uzhzhamum Yengiduthey,
    Unarvugalum Thudikuthey
    Um Mugathai Paarkenum
    Ummode Innayanum X 2
    Aarathanai – 3
    Umakke Thaaney X 2

    1 Neer Seithe Nanmaigazhai,
    Ninaithu Paarkiren
    Ovvondrum Oruvidham,
    Rusithe Magizhgiren X 2

    Ellam Maarakkanum,
    Ummaiye Ninaikkanum
    Um Sitham Seiyyanum,
    Innum Ummai Nerunganum X 2

    Uzhzhamum Yengidudhey… (Chorus)

    2 En Aasai Neer Thaaney,
    Neer Indri Naan Illai
    Um Anbai Vittu Ennaal,
    Yengu Sella Koodumo X 2

    Neere En Nambikkai,
    Neere En Aadharavu
    Um Samooghamey Podhum,
    Aathave En Anantham – 2

    Uzhzhamum Yengidudhey… (Chorus)

    (Artists: Ben Samuel, Joel Thomas Raj, John Jebaraj, Album: En Nesarae)

    Back to index

    Click below to listen to the song

  • Azhagae (அழகே)

    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிஜனம் இருந்தாலும்
    உம்மைவிட (இயேசுவைப்போல்)
    அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

    நான் உங்களை மறந்தபோதும்
    நீங்க என்னை மறக்கவில்லை
    நான் கீழே விழுந்தும் நீங்க
    என்னைவிட்டு க்கொடுக்கலயே……
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    என்னை தூக்க மறக்கலையே

    (Chorus)
    உம்மை ஆராதிப்பேன் அழகே!
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே

    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே

    நான் உடஞ்சு போயி கிடந்து,
    நான் நொருக்கபட்டு கிடந்து
    என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது
    நான் மறக்கலையே
    என் கண்ணீரை துடைத்துவிட்டத
    நான் மறக்கலையே

    உம்மை ஆராதிப்பேன் அழகே… (Chorus)

    Aayirangal Paarthalam
    Kodisanam Irunthalam
    Ummaivida (Yesuvaippol) Azhagu
    Innum Kandupidikkalaye X 2

    Naan Ungala Marandha Podhum
    Neenga Enna Marakkaville
    Naan Keezha Vizhunthum
    Neenge Enna Vittukodukalaye
    Ada Manushan Marandhum
    Neenga Enna Thookka Marakkalaye

    (Chorus)
    Ummai Aarathippen En Azhagae!
    Enna Mannikka Vandha Azhagae
    Ummai Paada, Ummai Pugazha
    Oru Naavu Patthalaye… X 2

    Kaasu Panam Illaama
    Mugavari Illaama
    Thanimayil Naan Azhudhadha
    Neer Marakkalaye X 2

    Naan Odanji Poi Kidandhen
    Naan Norukkapattu Kidandhen
    Yenna Otti Serka Neenge Vandhadhe
    Naan Marakkalaye
    Yen Kanneerai Neenga Thudaichu Vittadhe
    Naan Marakkalaye

    Ummai Aarathippen En Azhagae… (Chorus)

    (Written by Ps. John Jebaraj, Album: Levi 3)

    Back to index

    Click below to listen to the song

  • Aadharam Neer Dhaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)- old version

    ஆதாரம் நீர் தான் ஐயா,என் துறையே,
    ஆதாரம் நீர் தான் ஐயா

    1 சோதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் – 2
    ஆதாரம் நீர் தான் ஐயா…

    2 மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் – 2
    மற்றோர்க்கு பற்றேதையா
    எளியன் மேல், மற்றோர்க்கு பற்றேதையா
    எளியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா…

    3 நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் – 2
    நட்டாற்றில் விட்டாரையா
    தனியனை, நட்டாற்றில் விட்டாரையா
    தனியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா…

    4 கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே – 2
    வற்றா கிருபை நதியே
    என்பதியே, வற்றா கிருபை நதியே
    என்பதியே, ஆதாரம் நீர் தான் ஐயா…

    5 சோதனை அடர்ந்து, வேதனை தொடர்ந்து – 2
    துக்கம் மிகுவேளையில்,
    என் சுகிர்தமே, துக்கம் மிகுவேளையில்
    உன் தாசனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா,
    என் துறையே, ஆதாரம் நீர் தான் ஐயா…

    Aadhaaram Neer Thaan Aiyya
    En Duraiye, Aadhaaram Neer Thaan Aiyya

    1 Sodhaam Ulagil Naan Theedhaal Mayangayil – 2
    Aadhaaram Neer Thaan Aiyya…

    2 Maatha Pithavenai Theethaai Madhikkayil – 2
    Matrorkku Patredhaiyya
    Ezhiyan Mel, Matrorkku Patredhaiyya
    Ezhiyanukku Aadhaaram Neer Thaan Aiyya…

    3 Naam Naam Thunai Ena Nayandhurai Sonnavar – 2
    Nattaatril Vitaar Aiyya
    Thaniyanai, Nattaatril Vitaar Aiyya
    Thaniyanukku, Aadhaaram Neer Thaan Aiyya…

    4 Katror Perumaiye, Matror Arumaiye – 2
    Vatraa Krubai Nathiye
    En Padhiye, Vatraa Krubai Nathiye
    En Padhiye, Aadhaaram Neer Thaan Aiyya

    5 Sodhanai Adarndhu, Vedhanai Thodarnthu – 2
    Thukkam Migum Vezhayil
    En Sugirthamey, Dhukkam Migum Vezhayil
    Um Daasanukku, Aadhaaram Neer Thaan Aiyya
    En Duraiye, Aadhaaram Neer Thaan Aiyya

    (Written by Rev. Arulappan Devadoss)

    Back to index

    Click below to listen to the song

  • Aadhaaram Neer Thaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)

    ஆதாரம் நீர் தான் ஐயா – 2
    காலங்கள் மாற, கவலைகள் தீற
    காரணம் நீர் தான் ஐயா X 2

    1 உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
    கண்டேன் நான் இந்நாள் வரை
    ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
    குழப்பங்கள் நிறைகின்றன, என் இறைவா

    ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus)

    2 குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
    பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
    ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
    அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற

    ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus)

    3 உந்தனின் சாட்சியாய் வாழ
    உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
    உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
    சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் இறைவா

    ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus)

    Aadhaaram Neer Thaan Aiyaa – 2
    Kaalangazh Maara, Kavalaikazh Theera
    Kaaranam Neer Thaan Aiyaa X 2

    1 Ulakaththil Ennenna Jeyangazh
    Kanden Naan Innaazh Varai
    Aanaalum Yeno Nimmadhi Illai
    Kuzhappangazh Niraigindrana, En Iraiva

    Aadhaaram Neer Thaan Aiyaa… (Chorus)

    2 Kudumpaththil Kuzhappangal Illai
    Panakkashtam Ondrumae Illai
    Aanaalum Yeno Nimmadhi Illai
    Amaidhi Dhaan Kalaikindradhu, En Nilai Maara

    Aadhaaram Neer Thaan Aiyaa… (Chorus)

    3 Undhanin Saatchiyaay Vaazha
    Uzhzhaththil Vegu Naalaay Aasai
    Ummidam Vandhen Uzhzhaththai Thandhen
    Saatchiyaay Vaazhndhiduvaen, En Iraiva

    Aadhaaram Neer Thaan Aiyaa… (Chorus)

    (Written by Eva. Freddy Joseph, Album: En Meetpar Vol. 1)

    Back to index

    Click below to listen to the song

  • Anthyakaala / Thee pole (അന്ത്യകാല അഭിഷേകം/തീ പോലെ

    അന്ത്യകാല അഭിഷേകം
    സകല ജഡത്തിന്മേലും
    കൊയ്ത്തുക്കാല സമയമല്ലോ
    ആത്മാവിൽ നിറക്കേണമെ! X 2

    തീ പോലെ ഇറങ്ങേണമേ!
    അഗ്നി നാവായി പതിയണമേ!
    കൊടും കാറ്റായി വീഷേണമേ!
    ആത്മ നദിയായി ഒഴുകണമേ! X 2

    അസ്ഥിയുടെ താഴ്‌വരയിൽ
    ഒരു സൈന്യത്തെ ഞാൻ കാണുന്നു!
    അധികാരം പകരണമെ
    ഇനി ആത്മാവിൽ പ്രവചിച്ചിടാൻ X 2

    തീ പോലെ ഇറങ്ങണമെ…

    കർമ്മെലില്ലെ പ്രാർത്ഥനയിൽ
    ഒരു കൈ മേഘം ഞാൻ കാണുന്നു
    ആഹാബ് വിറച്ച പോലേ
    അഗ്നി മഴയായി പെയ്യണമേ! X 2

    തീ പോലെ ഇറങ്ങണമെ…

    സീനായി മലമുകളിൽ
    ഒരു തീ ജ്വാല ഞാൻ കാണുന്നു
    ഇസ്രായേലിൻ ദൈവമേ
    ആ തീ എന്മൽ ഇറക്കണമേ! X 2

    തീ പോലെ ഇറങ്ങണമെ…

    (Anthyakaala abhishekam
    Sakala jadaththinmelum
    Koythukaala samayamallo
    Aathmaavil nirakkename X 2)

    (Thee pole irangename
    Agni naavayi padhiyaname
    Kodum kaattaayi veeshename
    Aathma nadhiyaayi ozhukaname X 2)

    (Asthiyude thaazhvarayil
    Oru sainyaththe njan kaanunnu!
    Adhikaaram pakaraname
    Ini aathmaavil pravachichidaan X 2)

    (Thee pole iranganame…)

    (Carmel’ile praarthanayil
    Oru kai mekam njan kaanunnu
    Aahabu viracha pole
    Agni mazhayaayi peyyename! X 2)

    Thee pole iranganame…

    (Sinai malamukazhil
    Oru theejwala njaan kaanunnu
    Israyelin Daivame
    Aa thee enmel irakkename! X 2)

    (Thee pole iranganame…)

    (Written by Pr. Reji Narayanan, Album: Athmavam Daivame)

    Back to index

    Click below to listen to the song

    Thee pole iranganame- Video song (YouTube)