Christian Songs Booth

Tag: Old tamil Christian songs lyrics

  • Yerusalem Yerusalem Unnai (எருசலேம் எருசலேம் உன்னை)

    எருசலேம் எருசலேம்
    உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
    உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
    அரண்மனைக்குள்ளே பூரண சுகம்

    1 கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
    ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் X 2
    தயை செய்யும் காலம் வந்தது – 2
    குறித்த நேரமும் வந்துவிட்டது – 2

    விழித்தெழு சீயோனே
    வல்லமையை தரித்துக்கொள் X 2
    எருசலேம் எருசலேம் உன்னை
    சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்

    2 துரத்துண்ட இஸ்ரவேலரை
    துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் X 2
    சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2
    மகிமையிலே காட்சியளிப்பார் – 2

    விழித்தெழு சீயோனே… (Chorus)

    3 பூமியின் ஜனங்களுக்குள்ளே
    புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் X 2
    உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் – 2
    கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – 2

    விழித்தெழு சீயோனே… (Chorus)

    4 இரவும் பகலும் மௌனமாயிராத
    ஜாமக்காரர் உன் மதில்மேல் X 2
    அமரிந்திருக்க இருப்பதில்லை – 2
    அமர்ந்திருக்க விடுவதில்லை – 2

    விழித்தெழு சீயோனே… (Chorus)

    5 மலைகள் குன்றுகள் நடுவே
    மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் X 2
    மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
    ஓடி வந்து மீட்படைவார்கள் – 2

    6 கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
    தெரிந்துகொண்டார் உறைவிடமாய் (அவர்-) X 2
    அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
    அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2

    Yerusalem Yerusalem
    Unnai Snehippor Sugiththiruppaargazh
    Un Alangaththirkuzhzhe Samaadhaanam
    Aranmanaikkuzhzhe Poorana Sugam

    1 Karthar Unmel Manam Irangugiraar
    Aadharavaai Ezhundhu Nirkindrar X 2
    Dhayai Seyyum Kaalam Vandhadhu – 2
    Kuriththa Neramum Vandhuvittadhu – 2

    Vizhiththezhu Seeyoney
    Vallamaiyai Dhariththukkozh x 2
    Yerusalem Yerusalem
    Unnai Snehippor Sugiththiruppaargazh

    2 Thuraththunda Isravelarai
    Thuridhamaay Kootticherkkindrar X 2
    Seeyonai Thirumba Kattugiraar – 2
    Magimaiyile Kaatchiyazhippaar – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    3 Boomiyin Janangazhukkuzhzhe
    Pugalchiyum Keerthiyumaavaazh X 2
    Unnilirundhu Vedham Vezhippadum – 2
    Karthar Vasanam Prasiththamaagum – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    4 Iravum Pagalum Maunamaayiraadha
    Jaamakkaarar Un Madhilmel X 2
    Amarindhirukka Iruppadhillai – 2
    Amarnthirukka Viduvadhillai – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    5 Malaigazh Kundrugazh Naduve
    Miga Melaai Nilainiruththugiraar X 2
    Makkazh Inam Thedi Varuvaargazh – 2
    Odi Vandhu Meetpadaivaargazh – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    6 Karthar Unnai Virumbinapadiyaal
    Therindhukondaar Uraividamaai (Avar-) X 2
    Amarnthirukkum Ariyanai Nee Dhaan – 2
    Agilaththirkkum Vezhichcham Nee Dhaan – 2

    Vizhiththezhu Seeyoney… (Chorus)

    (Written by: Fr S.J. Berchmans, Album: Jebathotta Jeyageethangal, Vol. 38)

    Back to index

    Click below to listen to the song

  • Poorana Aaseer (பூரண ஆசீர்)

    1 பூரண ஆசீர் பொழிந்திடுமே
    பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
    ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
    தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

    வானம் திறந்துமே வல்ல ஆவியே
    வந்திறங்கி வரமே தந்தருளுமே
    அன்பின் அருள் மாரியே வாருமே
    அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

    2 ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
    ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
    வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
    சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

    வானம் திறந்துமே… (Chorus)

    3 தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
    தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
    சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
    சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

    வானம் திறந்துமே… (Chorus)

    4 மா பரிசுத்த ஸ்தலமதிலே
    மாசில்லாத தூய சந்நிதியிலே
    வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
    வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

    வானம் திறந்துமே… (Chorus)

    5 குற்றங் குறைகள் மீறுதல்களும்
    முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
    இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
    எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

    வானம் திறந்துமே… (Chorus)

    6 மேகத்திலே நான் வந்திறங்குவேன்
    வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
    என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
    இயேசுவே இறைவா வேகம் வாருமே

    வானம் திறந்துமே… (Chorus)

    1 Poorana Aaseer Pozhinthidume
    Poorippodu Vaazhndhu Vazham Perave
    Jeevathanneeraalae Thaakam Theerppadhaale
    Dheva Nadhi Paayndhe Sezhiththongumae

    Vaanam Thirandhume, Valla Aaviye
    Vandhirangi Varame, Thandharuzhume X 2
    Anbin Aruzh Maariye Vaarume
    Anbarin Nesam Pongi Paadave X 2

    2 Aaththuma Thaagam Theerkka Vaarume
    Aaviyil Niraindhu Makizhndhidavae
    Valla Abhishegam Agni Pragaasam
    Sollarum Santhosham Uzhzham Oottrume

    Vaanam Thirandhume… (Chorus)

    3 Dhevanbin Vezhzham Purandodudhe
    Thaavi Moozhkinome Neechchal Aazhame
    Sakthi Adaindheka Bakthiyodilanga
    Suththa Jeeva Ootre Pongi Pongi Vaa

    Vaanam Thirandhume… (Chorus)

    4 Maa Parisuththa Sthalamadhile
    Maasillaadha Thooya Sannidhiyile
    Vaan Magimai Thanga Vaanjaiyum Peruga
    Vallamai Vizhanga Thudhi Saattruvom

    Vaanam Thirandhume… (Chorus)

    5 Kuttran-kuraigazh Meerudhalgazhum
    Mutrumaaga Neenga Sutteriththidum
    Yesuvin Siluvai Raththame En Thevai
    Endhan Aaththumaavai Venmaiyaakkume

    Vaanam Thirandhume… (Chorus)

    6 Megaththile Naan Vandhiranguven
    Vegame Oar Naazhe Vezhippaduven
    Endruraiththa Dhevaa Eka Dhivya Moova
    Yesuve Iraiva Vegam Vaarume

    Vaanam Thirandhume… (Chorus)

    (Written by Sis. Sarah Navaroji, Album: Sangeethasevai Oyvadhillai Vol. 1)

    Back to index

    Click below to listen to the song

  • Aaraadhanai Aaraadhanai Thudhi (ஆராதனை ஆராதனை துதி)

    ஆராதனை ஆராதனை துதி
    ஆராதனை ஆராதனை X 2
    காலையிலும் மாலையிலும்
    ஆராதனை அப்பாவுக்கே X 2

    1 தூய ஆவியே உமக்கு ஆராதனை
    துணையாளரே உமக்கு ஆராதனை X 2
    வான பிதாவே உமக்கு ஆராதனை
    வழிகாட்டியே உமக்கு ஆராதனை X 2

    ஆராதனை ஆராதனை துதி… (Chorus)

    2 ஜீவ பலியே உமக்கு ஆராதனை
    ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை X 2
    மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
    மேசியாவே உமக்கு ஆராதனை X 2

    ஆராதனை ஆராதனை துதி… (Chorus)

    Aaraadhanai Aaraadhanai Thudhi
    Aaraadhanai Aaraadhanai X 2
    Kaalayilum Maalayilum
    Aaradhanai Appaavukke

    1 Thooya Aaviye Umakku Aaraadhanai
    Thunaiyazhare Umakku Aaraadhanai X 2
    Vaana Pithave Umakku Aaraadhanai
    Vazhikaattiye Umakku Aaraadhanai X 2

    Aaraadhanai Aaraadhanai… (Chorus)

    2 Jeeva Baliye Umakku Aaraadhanai
    Jeeva Thanneere Umakku Aaraadhanai X 2
    Megasthambame Umakku Aaraadhanai
    Messiah’ve Umakku Aaraadhanai X 2

    Aaraadhanai Aaraadhanai… (Chorus)

    (Written by Ps. Paul Thangiah, Album- Pugal Esuvukae)

    Back to index

    Click below to listen to the song

  • Amen Alleluya (ஆமென் அல்லேலூயா)

    ஆமென் அல்லேலூயா – 2
    மகத்துவத் தம்பராபரா,
    ஆமென் அல்லேலூயா
    ஜெயம், ஜெயம், அனந்த ஸ்தோத்திரா

    தொல்லை அனாதி தந்தார் – 2
    வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே, உன்னதமே!
    ஆமென் அல்லேலூயா
    ஜெயம், ஜெயம், அனந்த ஸ்தோத்திரா

    ஆமென் அல்லேலூயா… (Chorus)

    1 வெற்றிகொண்டார்ப் பரித்து – 2
    கொடும்வே, தாளத்தைச் சங்கரித்து
    முறித்து, பத்ராசனக் கிறிஸ்து
    மரித்து, பாடுபட்டுத்தரித்து முடித்தார்

    ஆமென் அல்லேலூயா… (Chorus)

    2 சாவின் கூர் ஒடிந்து – 2
    மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து
    விழுந்து, ஜீவனே விடிந்து
    தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

    ஆமென் அல்லேலூயா… (Chorus)

    3 வேதம் நிறைவேற்றி – 2
    மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி
    பொய் மாற்றி பாவிகளைத் தேற்றி
    கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

    ஆமென் அல்லேலூயா… (Chorus)

    Amen Alleluya – 2
    Magaththuva Thambaraaparaa,
    Amen Alleluya,
    Jeyam, Jeyam, Anantha Sthoththiraa

    Thollai Anaadhi Thanthaar – 2
    Vanthaar Irandh-uyirthezhundhaare, Unnathamae!
    Amen Alleluya,
    Jeyam, Jeyam, Anantha Sthoththiraa

    Amen Alleluya… (Chorus)

    1 Vetrikondaar Pariththu – 2
    Kodumve, Thaalaththai Sangariththu
    Muriththu, Pathraasanak Kiristhu
    Mariththu Paadupattu-ththariththu Mudiththaar

    Amen Alleluya… (Chorus)

    2 Saavin Koor Odindhu – 2
    Madindhu, Thaduppu Chuvar Idindhu
    Vilunthu, Jeevane Vidindhu
    Dhevaalaya Thirai Irandaay Kilindhu Ozhindhadhu

    Amen Alleluya… (Chorus)

    3 Vedham Niraivetri – 2
    Mey Thotri, Meettu Karaiyetri
    Poi Maatti, Paavikalai Thetri
    Kondaatri, Pathraasana Thetri Vaazhviththaar

    Amen Alleluya… (Chorus)

    (Written by Clement Vedanayagam, Album: Thanthaanai Thuthipom)

    Back to index

    Click below to listen to the song

  • Sthothiram Thudhi Paathira (ஸ்தோத்திரம் துதி பாத்திரா)

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா
    உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்

    காத்தீரே என்னைக் கருத்தாக
    வழுவாமல் என்னை உமக்காக
    எடுத்தீர் என்னையும் உமக்காக
    கொடுத்தீர் உம்மையும் எனக்காக

    1 வல்ல வான ஞான வினோதா
    துதியே துதியே துதித்திடுவேன் x 2
    எல்லாக் குறையும் தீர்த்தீரே
    தொல்லை யாவும் தொலைத்தீரே x 2
    அல்லல் யாவும் அறுத்தீரே
    அலைந்த என்னையும் மீட்டீரே

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus)

    2 நம்பினோரைக் காக்கும் தேவா
    துதியே துதியே துதித்திடுவேன் x 2
    அம்புவி யாவும் படைத்தீரே
    அம்பரா உந்தன் வாக்காலே x 2
    எம்பரா எல்லாம் ஈந்தீரே
    நம்பினோர்குந்தன் தயவாலே

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus)

    3 கண்ணின் மணிபோல் காத்தீரே
    எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் x 2
    அண்ணலே உந்தன் அருளாலே
    அடியாரைக் கண் பார்த்தீரே x 2
    மன்னா எமக்கும் நீர் தானே
    எந்நாளும் எங்கள் துணை நீரே

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus)

    4 தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
    துதியே துதியே துதித்திடுவேன் x 2
    தேவே நீர் உந்தன் சிறகாலே
    தினமும் மூடிக் காத்தீரே x 2
    தீதணுகாதும் மறைவினிலே
    தேடியுமதடி தங்கிடுவேன்

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus)

    5 அல்லேலூயா ஸ்தோத்திரமே
    துதியே துதியே துதித்திடுவேன் x 2
    அகில சிருஷ்டிகளும் துதிக்க
    அடிமை துதியாதிருப்பேனோ x 2
    அல்லும் பகலும் நித்தியமாய்
    அன்பே உம்மையே துதித்திடுவேன்

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus)

    Sthothiram Thuthi Pathira
    Ummai Indrum Endrum Thuththiduven

    Kaaththeere Ennai Karuththaaga
    Vazhuvaamal Endrum Umakkaaga
    Eduththeer Ennayum Umakkaga
    Kodutheer Umaiyum Enakkaga

    Sthothiram Thuthi Pathira… (Chorus)

    1 Valla Vaana Nyaana Vinodha
    Thudhiye Thudhiye Thudhiththiduven X 2
    Ella Kuraiyum Theertheere
    Thollai Yaavum Tholaitheere X 2
    Allal Yaavum Aruththeere
    Alayndha Enaiyum Meetteere

    2 Nambinorai Kakkum Dheva
    Thudhiye Thudhiye Thudhiththiduven
    Ambuviyaavum Padaitheere
    Ambaraa Unthan Vaakkaale
    Embara Ellaam Eendheere
    Nambinork-undhan Dhayavaale

    Sthothiram Thuthi Pathira.. (Chorus)

    3 Kannin Manipol Kaatheere – Emmai
    Thudhiye Thudhiye Thudhiththiduven X 2
    Annale Undhan Aruzhaale
    Adiyaarai Kan Paartheere X 2
    Manna Emakkum Neer Thaame
    Ennaazhum Engazh Thunai Neere

    Sthothiram Thuthi Pathira.. (Chorus)

    4 Theeyon Ambugazh Thaakkaadhe – Emmai
    Thudhiye Thudhiye Thudhiththiduven X 2
    Dheva Neer Undhan Siragaale
    Dhinamum Moodi Kaaththeere X 2
    Theedh-anugaadh-um Maraivinile
    Thedi Umathadi Thangiduven

    Sthothiram Thuthi Pathira.. (Chorus)

    5 Alleluya Sthothirame
    Thudhiye Thudhiye Thudhiththiduven X 2
    Agila Sirushtigalum Thudhikka
    Adimai Thudhiyaadhiruppeno X 2
    Allum Pagalum Nithiyaamaai
    Anbe Umaiyum Thuththiduven

    Sthothiram Thuthi Pathira.. (Chorus)

    (Written by Bro. Richard Vijay, Album: Thothiram Thuthipaathira)

    Back to index

    Click below to listen to the song